பெயர் : அப்துல் ரகுமான்
ஊர் : மதுரை
பிறந்த நாள் : 09.11.1937
கல்வி : எம். ஏ (தமிழ்). முனைவர் (Ph. D)
பணி : வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் முப்பதாண்டு காலம் பேராசிரியர் பணி. இப்போது முழு நேர இலக்கிய பணி.

எழுதிய நூல்கள் – 37

கவிதை தொகுப்புகள் : 12

1. பால்வீதி (1974)

2. நேயர் விருப்பம் (1978)

3. சுட்டுவிரல் (1989)

4. ஆலாபனை (1995)

5. பித்தன் (1998)

6. விதைபோல் விழுந்தவன் (1998)

7. முத்தமிழின் முகவரி (1998)

8. மின்மினிகளால் ஒரு கடிதம் (2004)

9. ரகசிய பூ (2005)

10. பறவையின் பாதை (2006)

11. இறந்ததால் பிறந்தவன் (கவியரங்க கவிதை முதல் தொகுதி) (2007)

12. தேவகானம் (2011)

13. பாலை நிலா (2013)

வசன கவிதை தொகுப்பு : 1

1. சொந்தச் சிறைகள் (1987)

கட்டுரை நூல்கள்: 22

1. அவளுக்கு நிலா என்று பெயர் (1986)

2. முட்டைவாசிகள் (1986)

3. மரணம் முற்றுப்புள்ளி அல்ல (1986)

4. விலங்குகள் இல்லாத கவிதை (1987)

5. கரைகளே நதியாவதில்லை (1985)

6. பூப்படைந்த சபதம் (1999)

7. தொலைப்பேசிக் கண்ணீர் (1999)

8. காற்று என் மனைவி (2003)

9. உறங்கும் அழகி (2003)

10. நெருப்பை அணைக்கும் நெருப்பு (2003)

11. பசி எந்தச் சாதி (2003)

12. நிலவிலிருந்து வந்தவன் (2003)

13. கடவுளின் முகவரி (2003)

14. முத்தங்கள் ஓய்வதில்லை (2003)

15. காக்கைச் சோறு (2004)

16. சோதிமிகு நவகவிதை (2004)

17. சிலந்தியின் வீடு (2005)

18. இது சிறகுகளின் நேரம் (2005)

19. இல்லையிலும் இருக்கிறான் (2006)

20. தட்டாதே திறந்திருக்கிறது (2008)

21. எம்மொழி செம்மொழி (2010)

22. பூக்காலம் (2010)

மொழி பெயர்ப்பு : 1

1. தாகூரின் ‘சித்ரா’ (2005)

ஆய்வு நூல்கள்: 2

1. புதுக்கவிதையில் குறியீடு (முனைவர் பட்ட ஆய்வேடு, 1989)

2. கம்பனின் அரசியல் கோட்பாடு (ஏவிம் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 1990)

பதிப்பித்த நூல்கள் : 6

1. குணங்குடியார் பாடற்கோவை (1980), மேலும் 5 சிறு கவிதைத் தொகுதிகள்

ஆய்வு கட்டுரைகள் : 15

ஆய்வு சொற்பொழிவுகள் : ஐம்பதுக்கும் மேல்

கவிதை வாசிப்புக்கும், சொற்பொழிவுக்கும் சென்று வந்த நாடுகள்:

இலங்கை, மலேயா, சிங்கபூர், பேங்காக், ஆங்காக், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குவைத், பக்ரைன்.

விருதுகள்

1. ‘கவியரசர் பாரிவிழா விருது’ குன்றக்குடி அடிகளார், 1986

2. ‘தமிழன்னை விருது’ (புதுக்கவிதைக்காக) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், 1989

3. ‘பாரதிதாசன் விருது’ தமிழக அரசு, 1989

4. ‘கலைமாமணி விருது’ தமிழக அரசு, 1989

5. ‘அக்ஷர விருது’ அக்னி, 1992

6. ‘சிற்பி அறக்கட்டளை விருது’, 1996

7. கலைஞர் விருது’ (ஒரு லட்சம் ரூபாய்), 1997

8. ‘ராணா இலக்கிய விருது’, 1998

9. ‘சாகித்ய அகாடமி விருது’ டெல்லி, 1999

10. ‘கம்ப காவலர்’, கொழும்பு கம்பன் கழகம், இலங்கை, 2006

11. ‘பொதிகை விருது’, பொதிகை தொலைக்காட்சி, 2007

12. ‘கம்பர் விருது’, கம்பன் கழகம், சென்னை, 2007

13. ‘சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்), 2007

14. ‘உமறு புலவர் விருது’ (ஒரு லட்சம் ரூபாய்), 2008

சிறப்பு பணிகள்

1. மதுரை ‘தமிழ் நாடு’ நாளிதழ், சென்னை ‘தமிழன்’ நாளிதழ், சிவகங்கை ‘அன்னம் விடு தூது’ இலக்கிய திங்களிதழ், சென்னை ‘மக்கள் நேசன்’ நாளிதழ், சென்னை ‘கவிக்கோ’ கவிதை மாத இதழ் ஆகியவற்றில் ஆசிரியர் பணி. ‘சமநிலைச் சமுதாயம்’ மாத இதழ் ஆலோசகர்.

2. 29 ஆண்டுக் காலம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணி, அதில் 20 ஆண்டுகாலம் தமிழ்த்துறைத் தலைவர் பணி

3. உருதுக் கவிஞர் இக்பாலின் கவிதைகளை உருதுவிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இரு வெளியீடுகளை வெளியிட்டது.

4. இந்தியாவின் பிற மொழிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள கவிதை இயக்கங்கள், புதுக் கவிதைகள், கவிஞர்களின் வரலாறு ஆகியவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்தி ‘ஜுனியர் விகடன்’ வார இதழில் நூறு வாரங்கள் கட்டுரை எழுதியது.

5. தமிழுக்குப் புதிய, அறிமுகமாகாத மீமெய்ம்மை இயல் (Surrealism) என்ற புகழ் பெற்ற புதுக் கவிதைக் கோட்பாட்டில் பரிசோதனைகள் செய்து கவிதைகள் எழுதிப் ‘பால்வீதி’ என்ற தொகுப்பை வெளியிட்டது.

6. புதுக் கவிதை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தின் சிறப்பு பற்றி ‘ஜுனியர் விகடனில்’ கட்டுரை எழுதியும், பிரச்சாரம் செய்தும் தமிழில் ஹைக்கூ வடிவம் பரவக் காரணமாக இருந்தது.

7. அரபி, பாரசீக, உருது மொழியில் புகழ் பெற்ற ‘கஸல்’ (Ghazal) வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு ‘பாக்யா’ இதழில் தொடர்ந்து அறுபத்து இரண்டு வாரம் சிறந்த கஸல் கண்ணிகளை விளக்கிக் கட்டுரைகள் எழுதியது. ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்ற பெயரில் தமிழில் முதல் கஸல் தொகுதியை வெளியிட்டது.

8. தமிழுக்கு புதிய ‘கஸல்’, ‘நஜ்ம்’ வடிவங்களிலும், இரு சீர் ஓர் அடி என்ற புதிய சிறிய வடிவத்திலும் கவிதைகள் எழுதித் தமிழுக்கு அளித்தது.

9. தமிழில் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத கவிதைக் குறியீடு (Poetic Symbol) பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைகழகத்தில் ‘புது கவிதையில் குறியீடு’ என்ற தலைப்பில் ஆய்வேடு அளித்து, முனைவர் பட்டம் பெற்றது.

10. கேரள சாகித்திய அகாடமி தயாரித்து 1984 – ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்ட ‘Comparative Indian Literature’ என்ற அரிய தொகுப்புக்காக ‘Tamil Modern Poetry’ என்ற தலைப்பில் தமிழில் நவீன இலக்கியம் பற்றி விரிவான வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி அளித்தது.

11. ‘ஜுனியர் போஸ்ட்’ வார இதழில் தொடர்ந்து ‘ஆறாவது விரல்’ என்ற தலைப்பில் 102 கட்டுரைகளும், ‘ஜுனியர் விகடனில்’ ‘இது சிறகுகளின் நேரம்’ என்ற தலைப்பில் 200 கட்டுரைகளும், குமுதம் ரிப்போர்ட்டரில்’ ‘பூக்காலம்’ என்ற தலைப்பில் 65 கட்டுரைகளும், கவிதை, தத்துவம், சமூகம், வாழ்க்கை, சமயம் பற்றி எழுதியது.

12. திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த (1986) திராவிடக் கவிதை மொழி பெயர்ப்புப் பணிக்களத்தில் பங்கு பெற்று, மற்ற திராவிட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய தமிழ்ப் புதுக் கவிதைகளை தேர்ந்தெடுத்து அளித்து, மற்ற திராவிட மொழிக் கவிதைகலை அம்மொழி அறிஞர்களின் துணையோடு தமிழில் மொழி பெயர்த்தது.

13. தமிழமெங்கும் கலைஞர் கருணா நிதி அவர்கள் தலைமையில் நிகழ்ந்த அண்ணா கவியரங்கங்களில் பங்கு பெற்றது.

14. வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் முத்தமிழ் விழாவில் ‘கவிராத்திரி’ என்ற புதுமுறைக் கவியரங்கம் நடத்தி மாணவர்கள் பலரைக் கவிஞர்களாக்கியது. அவர்களுடைய கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டது. இதன் மூலம் தமிழகமெங்கும் கவியரங்கத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

15. இந்து, இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், சமண சமயக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவ்வச் சமயத்து உயர்ந்த கொள்கைகளையும், மனிதநேயக் கருத்துக்களையும் எடுத்துக்காட்டிச் சமய சகோதர உறவுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பணியாற்றியது.

16. தமிழிலக்கியம் பற்றியும், புதுக்கவிதை பற்றியும், தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நூற்றுக் கணக்காண சொற்பொழிவுகள் நிகழ்த்தியது.

17. நூற்றுக்கணக்கான கவியரங்குகள் மூலமாகத் தமிழ்க் கவிதையில் புதிய, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வசன கவிதை, புதுக்கவிதைக்கு தமிழ் மக்களிடையே பரவலான வரவேற்புக்குப் பாடுபட்டது.

18. வேலூரில் ‘சீவக சிந்தாமணியையும்’,’திருக்குறளையும்’ முழுமையாக வாரந்தோறும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி (ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்) மக்களிடம் ‘சிந்தாமணி’,’திருக்குறள்’ கருத்துக்களைப் பரப்பியது.

19. அமெரிக்கா சென்றிருந்த போது பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வு இருக்கை ஏற்படுத்த நிதி தேவைப்படுகிறது என்பதைப் பேராசியர் ஹார்ட் மூலம் கேள்விப்பட்டு, அங்கு நிகழ்த்திய சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் நிதி திரட்டும் பணியைத் தொடங்கி வைத்தது. (இப்போது அங்கே தமிழிருக்கை ஏற்படுத்தப்பட்டு விட்டது.)

20. கீழக்கரையில் 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் மூன்று அமைப்பாளர்களில், ஒருவராக இருந்து, பல அரிய ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் வெளிவரக் காரணமாக இருந்தது.

21. ‘சன்’ தொலைக்காட்சியிலும் ‘விண்’ தொலைக்காட்சியிலும் வாரந்தோறும் ‘கவிராத்திரி’ என்ற புதுமைக் கவிதை நிகழ்வை இரண்டு ஆண்டுகள் நடத்தியது.

22. கல்லூரிப் பேராசிரியப் பணி முடிய நாண்காண்டுகள் இருந்த போதே, முழு நேர இலக்கியப் பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றது.

23. தமிழ்நாடு அரசு ஆட்சி மொழிக் குழுவில் ஆலோசகராகப் பணியாற்றியது.

24. தமிழ்நாடு அரசு ‘தமிழ் இலக்கியச் சங்கப் பலகை’ குறள்பீடச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியது.

25. தமிழ்நாடு அரசு, உருது மொழிக்குழு உறுப்பினராகப் பணியாற்றியது.

26. மத்திய அரசு தமிழ்மொழி மேம்பாட்டு (செம்மொழி) வாரிய உறுப்பினர்

27. மே, 2007 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மா நாட்டின் ஆலோசகராகப் பணியாற்றியது

28. இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை – நெறியாளர்.

29. 2009 முதல் 2011 வரை இரண்டான்டு காலம் தமிழ் நாடு வக்பு வாரிய தலைவராக பணியற்றி, ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மதிப்புடைய காலியாக கிடக்கும் வக்பு சொத்துக்களை மீட்டது.

பாராட்டுக்கள்

வெற்றி பல கண்டு நான்

விருது பெற வரும் போது

வெகுமானம் என்ன

வேண்டும் எனக் கேட்டால்,

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’

– முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர்

‘நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் ‘தமிழில் இப்படி எழுத யாருமில்லையே’ என ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார்.

இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து வெளியிட்டால், ‘யார் இந்தக் கவிஞன்?’ என்று உலகம் விசாரிக்கும்.’

– கவியரசு கண்ணதாசன்.

‘கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன’

– வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.

இன்று பலர் புதுக்கவிதை எழுதுகின்றார்

எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்

முன் நிற்கும் மோனையைப் போல் முன் நிற்கின்றார்

முன்னேறி முன்னேறி வளர்ந்து, தம்மைப்

பின்பற்றும்படி செய்து வருவதோடு

பெரும்புகழுக் குரியவராய் விளங்குகின்றார்

மன்றத்தில் இவரைப் போல் புதுமையாக

மற்றவர்கள் பாடுதற்கே முடியவில்லை

– உவமைக் கவிஞர் சுரதா, ‘நேயர் விருப்பம்’ முன்னுரையில்

ஒடிந்து விழும் சிந்தனையோ, விஞ்ஞானத்தை

ஒதுக்குகின்ற பழமைகளோ, சமுதா யத்தில்

படிந்திருக்கும் தீமைகளை வெள்ளைத் தாளில்

பதிவு செய்யும் பாடல்களோ நூலில் இல்லை

உடனடியாய் இந்நூலை ஆங்கிலத்தில்

ஒழுங்காக மொழிபெயர்த்தால் ரகுமான் கீர்த்தி

கிடுகிடென மேனாட்டில் பரவும் அந்தக்

கீா்த்தியினைப் பெறும் தகுதி இவருக் குண்டு

– உவமைக் கவிஞர் சுரதா, ‘நேயர் விருப்பம்’ முன்னுரையில்

ரகுமான்! கவியரங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய், இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்!’

– தமிழறிஞர் அ.ச.ஞா.