அன்பர்களே!
வணக்கம். உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்!. உங்களோடு தொடர்புகொள்ள புதிய வலைத்தளம் தொடங்கி இருக்கின்றேன். இதுதான் வலைத்தள முகவரி www.kavikko.com

இனி இவ்வலைத்தளத்தின் வாயிலாக என் புத்தகங்களை நீங்கள் பெறலாம். என் கவிதைகளை, கட்டுரைகளை, அவ்வப்போது வரும் பிரச்சினைகளைப்பற்றிய என் கருத்துக்களை, நான் படித்ததில் பிடித்ததை நீங்கள் படித்து மகிழலாம். என் சொற்பொழிவுகளை ஆடியோ (கேளொலி) மற்றும் வீடியோ (காணொளி) வாயிலாக கேட்டு மகிழலாம்.

வேண்டுகோள்:-

உங்களிடம் இருக்கும் என்னைப்பற்றிய புகைப்படங்கள், நீங்கள் என்னைப்பற்றியும் என் படைப்புகளைப்பற்றியும், எழுதியவை, எழுத நினைப்பவை, என்னோடு பழகிய அனுபவங்கள், என்னைப்பற்றி பத்திரிக்கைகளிலோ, வலைத்தளங்களிலோ, நீங்கள் படித்தவை, எனக்குத்தெரிவிக்க வேண்டுமென்று நீங்கள் நினைப்பவை ஆகியவற்றை நீங்கள் எனக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். இலக்கியம், இஸ்லாம் பற்றி உங்களுக்கு இருக்கும் ஐயங்களை என்னிடம் கேட்கலாம். இயன்றவரை பதில் தருவேன்.

எனது படைப்புகளை வாசித்து மகிழத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

இஸ்லாமிய ஆங்கில புத்தக நிலையம்,
எண். 6, 2வது பிரதான சாலை,
சி.ஐ.டி. காலணி, மைலாப்பூர்,
சென்னை – 600 004,

தொலைபேசி: +9144  2499 7373
அலைபேசி: +91 95000 – 37000

இனி நாம் நாள்தோறும் சந்தித்து மகிழ்வோம்.

கவிக்கோ அப்துல் ரகுமான்